புதிதாக வாங்கிய ஒன் பிளஸ் போன் வெடித்து சிதறிய அதிர்ச்சி சம்பவம்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புத்தம் புதியதாக வாங்கியவன் ஒன் பிளஸ் ஐபோன் வெடித்து சிதறிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷர்மா என்பவர் தனது மனைவிக்கு 5 நாட்களுக்கு முன்பு ஒன் பிளஸ்5 ஜி மொபைல் போனை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் செல்போனை ஹேண்ட் பேக்கில் வைத்து விட்டு அந்த பெண் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென போன் வெடித்து தீப்பிடித்து வெடித்துள்ளது. இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டவர் அந்த நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஒன் பிளஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபர் தங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படியும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ள.து ஒன் பிளஸ் 5 ஜி செல்போன் கடந்த மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.






