--- --:--:-- --

கோவை தங்கம் உள்ளிட்ட 5 பேர் கொலை மிரட்டல் விடுப்பதாக பெண் புகார்..!

11

ட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உள்ளிட்ட 5 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமக்கு பாதுகாப்பு தருமாறும் பெண் தொழிலதிபர் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் குமார் எழுதி இருக்கிறார்.

 

கோவையை சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா டிஜிபியிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். திருமணமாகி விவாகரத்தான அருள் பிரகாஷ் என்பவருடன் பழகி வந்ததாகவும் அதன் மூலம் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

ஆனால் பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் தாமதித்து வந்ததாகவும் சிந்துஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் என்றும் தனது ஆபாச படத்தை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியதாகவும் இதனால் அச்சமடைந்து கோவை காவல் துறையில் புகார் அளித்ததாகவும் சிந்துஜா கூறியுள்ளார்.

 

தற்போது வழக்கை திரும்பப் பெற்று விடுமாறு கூறி கோவை தங்கம் சிலரோடு வந்து மிரட்டி சென்றிருப்பதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவை தங்கம், அருள் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுப்பதோடு தனக்கு பாதுகாப்பை தருமாறு கோரி இருப்பதாக சிந்துஜா கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon