--- --:--:-- --

சேலம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் 31ஆம் தேதி வரை மழை நீடிக்கும்..!

10

சேலம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவகாற்று காரணமாக சேலம் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம். தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வட கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

 

29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோவை, நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon