இந்தியர்கள் நேரடியாக சவுதி அரேபியாவிற்கு வர தடை..!
இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவுதி அரேபியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பட்டியலில் உள்ள இந்த ஒன்பது நாடுகள் அல்லாத ஒரு நாட்டில் இரண்டு வாரங்கள் தங்கிய பின்னர் அந்த நாட்டின் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அப்படி சவுதி அரேபியாவிற்கு வருபவர்களும் தடை விதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்க கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து நேரடியாக சவுதி அரேபியா வர தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் கடந்த மாதம் ஆறாம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தடை நீக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் ஆக இருந்தால் சவுதி வந்தவுடன் ஏழு நாட்கள் ஹோட்டல்களில் குவாரண்டைன் இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






