--- --:--:-- --

சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர்..!

10

கிருஷ்ணகிரியில் அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 

சசிகலா அதிமுகவில் தலைமை ஏற்கவேண்டும் என்று பகிரங்கமாக போஸ்டர்களில் அச்சிட்டு கிருஷ்ணகிரி ரவுண்டானா காவேரிப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரை பார்த்து அதிமுக பிரமுகர் தேவதாசன் அவருடைய பெயரை பகிரங்கமாக அச்சிட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து இன்று ஒட்டியுள்ள போஸ்டரில் 65 சட்டமன்ற தொகுதிகளில் வென்று விட்டால் இவர்களின் பின்னால் மக்கள் இருப்பதாக அர்த்தமில்லை என்ற வசனங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon