குரங்குகளை தாக்கும் வைரஸ் மனிதனை தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு..!
சீனாவில் குரங்குகளை தாக்கும் வைரஸ் மனிதனை தாக்கியதால் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர் மார்ச் மாதம் இறந்து போன இரண்டு குழந்தைகளுக்கு பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதில் வாந்தி ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர் மே மாத இறுதியில் உயிரிழந்தார். அவரது மூளையை தண்டுவட ஆய்வுக்கு உட்படுத்தியபோது குரங்குகளை தாக்கும் பிவி வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
பிவி வைரசால் பாதிக்கப்பட்ட குரங்குகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் மனிதர்களை இந்த வைரஸ் தாக்கும் என்றும் இதனால் 70 முதல் 80 சதவீதம் வரை மரணம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




