மலையாள சினிமா இந்திய சினிமாவை போல் அல்ல – நடிகர் பகத் பாசில்
ஒரு படம் எந்த எல்லைவரை செல்ல வேண்டும் என்பதை ரசிகர்கள் முடிவு செய்வார்கள் என நடிகர் பகத் பாசில் கருத்து தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமா மற்ற சினிமாக்களை போல் ஏன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இல்லை என்றும், ஒரு திரைப்படம் தான் அதன் பயணத்தை தீர்மானிக்கிறது என உறுதியாக நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மாலிக் பட இயக்குனர் மஹேஷ் நாராயணன் குறிப்பிடுகையில் இதற்கு முன் காணப்படாத செய்யப்படாத விஷயங்களில் கவனத்தை செலுத்துவதால் அந்த படம் எவ்வளவு வசூலிக்கும் என்பது குறித்து ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் சாரஷ் உள்ளிட்ட மலையாளத் திரைப்படங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.






