--- --:--:-- --

குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகளும் இரண்டு பெண்களும் உயிரிழப்பு..!

3

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகளும் இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். புது கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்த சுமதி ஜோதிலட்சுமி ஆகிய இரண்டு பெண்களும் தங்கள் பிள்ளைகள் ஹர்ஷிதா நர்மதா ஆகியோருடன் அங்காளம்மன் குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர்.

 

சிறுமிகள் மூவரும் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹர்ஷிதா என்று சிறுமி நீரில் மூழ்கி சேற்றில் சிக்கிக் கொண்டார். அந்த சிறுமியை காப்பாற்றுவதற்காக குளத்திற்குள் அடுத்தடுத்து சென்றாலும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

அணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினர் உடல்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon