இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பேருந்தில் பயணச் சீட்டு வழங்கப்படும்..!
அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள மகளிருக்கு பேருந்தில் பயணச் சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் திருநங்கைகளுக்கும் இலவச பயணம் மேற்கொள்ளும் முறையை தமிழக அரசு அறிவித்தது. அது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இன்று முதல் பேருந்தில் பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும், இந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதை கண்டறிய பயணச்சீட்டு வழங்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.






