உத்திரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 68 பேர் உயிரிழப்பு..!
உத்திரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் செல்ஃபி எடுத்தவர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்தனர், இதுதவிர ஆடு,பசு என மொத்தம் 13 கால்நடைகளும் உயிரிழந்தனர்.
இவற்றில் 18 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் 7 குழந்தைகள் அடங்குவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஜெய்ப்பூர் கோட்டை அருகே மலைப் பகுதியில் செல்பி எடுத்துக் கொண்டு இருந்தவர்களும் அடங்குவார்கள். இதுதவிர 6 குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






