--- --:--:-- --

தமிழ்நாட்டை ஒட்டிய கிராமத்தில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று..!

19

தமிழ்நாட்டை ஒட்டிய கேரள கிராமத்தில் ஜிகா வைரஸ் தொற்று 15 பேருக்கு உறுதியானதை அடுத்து தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லையான சிறுவாணகோணம் பகுதியை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

 

அந்த பெண்ணின் உறவினர்கள் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்த மருத்துவமனை அருகே உள்ள வீடுகள் மற்றும் அந்த புதருக்குள் இருந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்த பிற நபர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

 

சோதனை முடிவுகளில் தற்போது மேலும் 14 பேருக்கு வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக – கேரள எல்லைப் பகுதியில் 30க்கும் மேற்பட்டவர்களிடம் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

 

கொரொனா பரவாமல் தடுக்க தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை சார்பில் எல்லைப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon