தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்..!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரொனா குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கூடுதல் தளர்வுகளுடன் 19ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. வெளிமாநிலங்களில் பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
எனவே அனுமதிக்கப்பட்ட கடைகள் இரவு 9 மணிவரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வேலைவாய்ப்புகள் தொடர்பான எழுத்து தேர்வுகள் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. தளர்வுகள் உடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. கல்லூரிகள் திரையரங்குகளை திறக்க தடை நீடிக்கிறது.






