ஒரு குழந்தை போதும் என்ற பெற்றோருக்கு சிறப்பு ஊக்கத்தொகை..!
Happy baby laying on belly
ஒரு குழந்தை போதும் என்ற பெற்றோருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மாநில அரசு புதிய மக்கள்தொகை மசோதாவை அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளது.
அதன்படி ஒரு குழந்தை போதும் என்ற குடும்பத்தில் அந்தக் குழந்தைக்கு இலவசமாக கல்வி மற்றும் மருத்துவ அறிவியல் கல்லூரியில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
இரண்டு குழந்தைகளோடு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்களுக்கு அரசு வேலை, தேர்தலில் போட்டி உள்ளிட்ட பல்வேறு தடைகள் விதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.






