சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம்..!
சென்னை தி நகரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி சரவணா ஸ்டோர்ஸ் பல்பொருள் அங்காடிக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் கடையை உடனடியாக உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பெரிய கடைகளை திறக்க அறிவிக்கப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் பால் பொருள் அங்காடி விதிகளை மீறி அதிக அளவிலான நபர்களுடன் செயல்பட்டதாக அதிகாரிகள் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
அத்துடன் ஒருநாள் கடையை மூட உத்தரவிட்டதை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு கடை மூடப்பட்டது மீண்டும் விதிகளை மீறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்து செல்கின்றனர்.






