--- --:--:-- --

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை..!

16

தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைவதன் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 13ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் மத்திய வங்கக் கடல், மேற்கு வங்க கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon