--- --:--:-- --

பள்ளிக்கட்டண நிலுவை தொகையை செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் சேர்க்க மறுப்பு..!

5

பள்ளிக்கட்டண நிலுவை தொகையை செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுப்பதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் தொடர்ந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது கடந்த ஆண்டில் உள்ள கட்டணம் ஆகியவற்றை செலுத்தினால்தான் நடப்பு கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள முடியுமென வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

 

கட்டண பாக்கியை தள்ளுபடி செய்து ஆன்லைன் வகுப்புகள் அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

 

அப்போது நீதிபதிகள் உத்தரவு படி கடந்த ஆண்டு 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணய குழு அமைத்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon