எந்த அலை வந்தாலும் சந்திக்கலாம் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரொனா வழிமுறைகளை மக்கள் கடைபிடித்தால் எந்த அலை வந்தாலும் சந்திக்கலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கை கழுவுதல் போன்ற அடிப்படை பழக்கங்களை பின்பற்றினால் கொரொனா வராமல் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார்.






