--- --:--:-- --

காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர் கைது..!

13

துரையில் கோழியை காணவில்லை என்ற சண்டையில் காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

விடுமுறையில் சொந்த ஊர் திரும்பிய அவர் கோழியை காணவில்லை என்று பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றதால் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிமாறன் என்ற காவலரின் மூக்கை இராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் கடித்து துப்பியுள்ளார். மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் காவலர் மணிமாறன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

விசாரணைக்கு சென்ற காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon