--- --:--:-- --

அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

12

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை ,புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திருப்பூர், திண்டுக்கல், தேனி தென்காசியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

மேலும் பலத்த காற்று வீசும் என்பதால் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon