ஜி 7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பங்கேற்கிறார்..!
ஜூன் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஜி 7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பங்கேற்க உள்ளார். ஜி7 ல் புதிதாக பொறுப்பேற்றுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பை இந்த மாநாட்டில் அமர்வுகளில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, கொரியன் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஜி7 மாநாட்டில் உச்சி மாநாட்டிற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர்.
கொரொனாவில் இருந்து சர்வதேச அளவில் மீண்டு கொரொனாவுக்கு எதிரான உறுதியை வலுப்படுத்தல், சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு ஆதரவளித்து எதிர்கால வளத்தை ஊக்கப்படுத்தல், பருவநிலை மாற்றத்தை எதிர் கொண்டு பூமியின் பல்லுயிராக்கத்தை காத்தல் மற்றும் திறந்தவெளி சமூகங்களை ஊக்குவித்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக ஆலோசிக்கப்படும் உள்ளன.
கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிரான்ஸ் தலைமையில் 2019ஈள் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நல்லெண்ண பங்குதாரராக பங்கேற்ற பிரதமர் மோடி பருவநிலை பல்லுயிர் ஆக்கம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் நாளைக்கு அமர்வுகளில் கலந்து கொண்டார்.






