தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை..!
தமிழ்நாட்டில் கொரொனா தொற்று பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்ய அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதையடுத்து மேலும் சில தளங்களுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
அப்போது மேலும் ஒரு வாரத்திற்கு உடனே அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். தொற்று குறைந்து வரும் மாவட்டத்தில் நடை பயிற்சிக்கு அனுமதி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்கலாம் என்றும் பரிசீலிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






