--- --:--:-- --

உலகின் மிக நீளமான ராஜநாகத்தின் வீடியோ வைரல்..!

7

உலகின் மிக நீளமான ராஜநாகங்களில் ஒன்று ஹிமாச்சல பிரதேசத்தில் தென்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளபகுதியில் மிகவும் நீளமான ராஜநாகம் தென்பட்டுள்ளது. இதை ஹிமாச்சல பிரதேச மாநில வனத்துறையினர் வீடியோ எடுத்துள்ளனர்.

 

பொதுவாக ராஜநாக வகையை சேர்ந்த பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளரும். இதற்கு முன்பு இலண்டன் உயிரின காட்சி சாலையில் இருந்த ஒரு பாம்பு 18.8 அடி நீளம் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தாய்லாந்து நாட்டின் மலை பகுதியில் பிடிபட்ட ஒரு பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது.

 

அதனை தொடர்ந்து இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் மிகவும் நீளமான ராஜநாகம் பாம்பு தென்பட்டுள்ளது. இது எத்தனை அடி நீளம் கொண்ட பாம்பு என்பதை வனத்துறையினர் வெளியிடவில்லை.

 

ஆனால் உலகின் மிக நீளமான ராகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. புற்று போன்ற பகுதிகளிலிருந்து புதரை நோக்கி செல்லும் ராஜநாகத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon