ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புத் துறையினருக்கு பாராட்டு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புத் துறையினருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

 

மகாராஷ்டிர மாநிலத்தில் குர்லா பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் அந்த பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முற்பட்டபோது தவறி விழுந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புத் துறையினர் ஒருவர் உடனடியாக விரைந்து சென்று தவறி விழுந்த பயணியை காப்பாற்றியுள்ளார்.

 

தன் உயிரை பொருட்படுத்தாமல் பயணியின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்புத் துறையை சேர்ந்தவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.


Leave a Reply