உடல்நிலை சரியில்லாமல் வந்த சிறுவனை அலைக்கழித்த மருத்துவர்..!
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற மகனுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைகழித்ததாக கதிர்வேல் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
விக்கிரவாண்டியில் கதிர்வேல் என்பவர் தனது 12 வயது மகனை காய்ச்சல், இருமல், சளி, தொல்லை காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அவசர சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்ததாக தெரிகிறது.
உடல்நிலை சோர்ந்து காணப்பட்ட மகனுடன் பல பிரிவுகளுக்குள் சென்று சிகிச்சை அளிக்காத நிலையில் தன் மகனை அழைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அரசு மருத்துவமனையில் தான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழிக்கப்பட்டதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசுவதற்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்கவில்லை.






