--- --:--:-- --

சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதையடுத்து யானைகளுக்கு பரிசோதனை

3

ண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

 

முதுமலை தெப்பக்காடில் 27 வளர்ப்பு யானைகள் உள்ள நிலையில் முகாமில் யானைகள் உணவருந்தும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் யானைகளுக்கு உணவளிக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

கொரொனா தொற்றின் காரணமாக உணவருந்தும் இடத்தில் யானைகள் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை யானைகள் முகாமிலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு இன்று கொரொனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon