முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று..!
ஈரோடு திண்டல் பகுதியில் முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டல் லிட்டில் சிஸ்டர் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்படுகிறது. இங்கு 76 முதியோர் தங்கியுள்ளனர். இவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்ததையடுத்து 76 முதியோர்களுக்கும் கொரொனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அனைவரும் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 36 முதியவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.






