--- --:--:-- --

பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத தனியார் பள்ளி, தாளாளர்..!

2

பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் விசாரணைக்கு மாவட்ட குழந்தைகள் நல குழு முன் ஆஜராகவில்லை.

 

கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கடந்த 24ஆம் தேதி அந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சூரியகலா விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்றபோது அவரை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை.

 

பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரை இன்று காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 26ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நல குழு சம்மன் அனுப்பியது.

 

ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை விளக்கமும் அளிக்கவில்லை என்று மாவட்ட குழந்தைகள் நல குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon