--- --:--:-- --

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 2,500 ஆக உயர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

9

மிழகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அரசு 2,500 ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தற்போது அடிப்படை வசதிகள் கொண்ட 977 ஆம்புலன்ஸ்கள் உள்பட மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்றும், ஆண்டுதோறும் 3 லட்சம் தாய்மார்களின் உயிரைக் காக்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் பெருமைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், 2005-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்ததில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon