பராமரிப்பு பணிக்காக மின்சார நிறுத்தம் செய்யும் நேரம் குறைப்பு..!
பராமரிப்பு பணிக்காக மின்சார நிறுத்தம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டு இருப்பதாக மின்சாரவாரியம் தெரிவித்திருக்கிறது. பராமரிப்பு பணிக்காக ஒன்பது அல்லது பத்து மணியிலிருந்து 5 மணி வரை இருந்த மின் நிறுத்தம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது.
கொரொனா காலத்தில் வீட்டிலிருந்தே பணி மற்றும் வகுப்புகள் நடப்பதை கருதி மின்னழுத்த நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
பகல் 12 மணிக்குள் ஏதாவது இரண்டு மணி நேரத்தை பராமரிப்பு பணிக்காக மின்சார நிறுத்தம் செய்யப்பட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.







