--- --:--:-- --

4 மகன்கள் கொரொனாவால் உயிரிழந்த அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு..!

6

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்கள் உட்பட 5 பேர் கொரொனா தொற்றுக்கு பலியானதால் அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சோகம் நேரிட்டுள்ளது.

 

அவிநாசி அருகே வெளிரவேலி கிராமத்தை சேர்ந்த தெய்வராஜ் என்ற 42 வயது நபர் இரண்டு வாரங்களுக்கு முன் கோவை சென்று வந்தபின் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

 

அவருக்கு கொரொனா இருப்பது தெரியாமல் போனதால் அவரது மனைவி சாந்தி, தேவராஜன் அண்ணன் ராஜா, தங்கராஜ், சௌந்தரராஜன் ஆகியோருக்கும் தொற்று பரவியதால் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

 

இவர்களின் தாயான 72 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில் நான்கு மகன்களும் ஒரு மருமகளும் உயிரிழந்த செய்தியை உறவினர்கள் மறைத்துவிட்டனர்.

 

மகன்கள் தன்னை பார்க்க வராதது பற்றி விசாரித்தபோது தான் மூதாட்டிக்கு நான்கு மகன்களும் ஒரு மருகளும் உயிரிழந்தது தெரியவந்தது. அதிர்ச்சியில் மூதாட்டியும் உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon