பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறதா..?
பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் விற்பனைக்காக சலவை செய்வது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரொனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும், கையுறை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் மற்றும் கையுறைகள் விற்பனை செய்யப்படுவதற்காக மீண்டும் சலவை செய்வது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.







