தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்..!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இயல்பை விட அடுத்த இரண்டு நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும், கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறிய வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்கள் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





