--- --:--:-- --

கருப்பு பூஞ்சை நோய் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நாளை ஆலோசனை..!

10

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர்கள் உடன் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதுவரை 256 நபர்கள் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ வல்லுனர்கள் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் குழுவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

பூஞ்சையை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் நடவடிக்கைகள், தடுப்பு மருந்துகள் கையிருப்பு, கூடுதல் மருந்துகள் பறிமுதல், மருத்துவமனையில் சிகிச்சை மையம் ஏற்பாடுகள் குறித்து மருத்துவ ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு நடவடிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon