நாளை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கிறது யாஸ் புயல்..!
வங்கக் கடலில் உருவான புயல் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. ஒடிஸா மாநிலம் பாரதீப்பில் இருந்து 390 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் திகாவில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
இன்று மாலை அதி தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா, மேற்கு வங்கம் இடையே நடுவே நாளை மதியம் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 160 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் சிக்கிம் மற்றும் பிரதேசத்தின் பல பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் மீட்பு பணிகளுக்காக கடற்படை விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட அமைப்புகள் களமிறங்கியுள்ளன.
அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் முதலமைச்சருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினர்.
மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை வைக்குமாறு அறிவுறுத்தினார்.






