தமிழகத்தில் கொரோனா வேகம் சற்று குறைந்தது: இன்று 34,867 பேருக்கு தொற்று உறுதி.. 404 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் தற்போது 3,01,580 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 4985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 27,026 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




