புதிய செருப்பை கடித்ததால் நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்த சென்ற கொடூரம்..!
புதிய செருப்பை கடித்ததால் பைக்கில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம் மங்களூருவில் நடந்துள்ளது. மங்களூரில் இருசக்கர வாகனத்தில் நாய் ஒன்றை கட்டி சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் அந்த நாயின் காலில் ரத்தம் வந்ததும் தெரிய வந்துள்ளது. இதில் புதிய செருப்பை கடித்ததால் பைக்கில் நாயை கட்டி இழுத்து சென்றதும் தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





