--- --:--:-- --

கொரொனா சிகிச்சைக்கு 50 கோடி ஒதுக்கீடு..!

9

கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரொனாத் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண வங்கிகளுக்கு நிதி அளிக்குமாறு மக்களிடம் அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

 

இந்த நிலையில் நேற்று வரை 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாக பெறப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

அந்த தொகையில் 25 கோடி ரூபாயைக் கொரொனா நோயாளிகளுக்கு தரப்படும் ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கும் மேலும் 25 கோடி ரூபாயை வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான கண்டெயினர் வாங்க செலவு செய்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இதன்மூலம் கொரொனாவை தடுக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வாங்க மொத்தம் 50 கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon