தமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 335 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 6,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று புதிதாக 33075 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தினசரி பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ளது.
20,486 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 335 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 183 பேரும், தனியார் மருத்துவமனையில் 152 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 16,31,291 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,31,596 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 13,81,69 பேர் குணமடைந்துள்ளனர். 18,005 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய அறிக்கையின்படி 1,56,278 மாதிரிகளும் 1,49,449 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,52,73,493 மாதிரிகளும் 2,47,75264 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




