--- --:--:-- --

தமிழகத்துக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

2

மிழகத்திற்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜனை கூடுதலாக ஒதுக்கீடு செய்து அனுப்பி தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் அளவு 440 மெட்ரிக் டன் என்கிற அளவில் தற்போது இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அடுத்த இரு வாரங்களில் கூடுதலாக 400 மெட்ரிக் டன் என்ற அளவில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

இதனால் அடுத்த நான்கு நாட்களுக்குள் கேரளாவில் கஞ்சிக்கோடு பகுதியில் தயாரிக்கப்படும் மருத்துவ ஆக்ஸிஜனில் 40 மெட்ரிக் டன்னை தமிழகத்திற்கு அனுப்புமாறு மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதேபோல ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் 60 மெட்ரிக் டன்னை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அதில் 60 மெட்ரிக் டன்னை இரு நாட்களுக்குள் வழங்குமாறு மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார் .

 

மேலும் இடைக்கால தேவை கருதி ரூர்கேலாவில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜனின் 120 டன் மெட்ரிக் டன் அனுப்பி தருமாறு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon