வரும் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு..! எவற்றுக்கெல்லாம் அனுமதி..!
கொரொனா பரவலை தடுக்க வரும் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் பங்குகள் நேர கட்டுப்பாடின்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகள் 12:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மளிகை, காய்கறி ,இறைச்சி கடைகள் 12:00 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் 12:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நடைபெற்று வரும் கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் சாலையோர உணவகங்கள் இயக்க தடை. அனைத்து தனியார் அலுவலகங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் இயங்காது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முடி திருத்தும் கடைகளுக்கு தடை. உடற்பயிற்சி கூடங்கள் தடை.
பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் இயங்க அனுமதி இல்லை. வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து விமானம் ரயில் போக்குவரத்துக்கு தடை.
சமுதாயம் அரசியல் விளையாட்டு விழாக்களுக்கு தடை நீடிக்கும். தங்கும் விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்களில் சடங்குகளின் 20 பேர்க்கு மட்டுமே அனுமதி. கோவில்களில் குடமுழுக்கு மற்றும் திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை. நீலகிரி கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனைத்து நாட்களும் தடை.
கடற்கரை பகுதிகளில் வாரத்தின் அனைத்து நாட்களும் பொதுமக்கள் செல்ல தடை. கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், சிப்காட், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட தடை.




