மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!
சென்னையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். நெற்குன்றத்தை சேர்ந்த ஆலன் – லட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ளது.
மகளுக்கு திருமணம் முடித்த நிலையில் இவர்கள் இருவரும் நான்காண்டுகளாக நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஆலன் தண்ணீர் வினியோகம், லட்சுமி பூ வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து கொலை நடந்த இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதிலும் போதைக்கு அடிமையானவர் எனவும் கடந்த 20 ஆண்டுகளாக மனைவி மீது சந்தேகம் கொண்ட அடிக்கடி சண்டை யிட்டு வந்ததும் தெரியவந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு இருவருக்கும் சண்டை ஏற்பட்டு லட்சுமி தனது மகன் ஆனந்த் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று மாலை மகன் வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்து பிரியாணி வாங்கி கொடுத்து அழைத்து வந்த ஆலன் இரவு தூங்கும் போது அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






