அமைச்சர் விழாவில் கிறிஸ்துவ பாடலுக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து..!
சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைத் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். இந்த விழாவில் முதலில் கிறிஸ்தவ பாடலும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
உடற்கல்வியியல் கல்லூரி ஒரு கிறிஸ்தவ கல்வி மையம் என்பதால் முதலில் ஜெபம் செய்ததாக விளக்கமளித்த அமைச்சர் ராஜேஷ்குமார், பொது நிறுவனங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




