--- --:--:-- --

பன்னீர் சோடாவிற்குள் கிடந்த ஊசி..!

9

அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் அதே ஊரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் பன்னீர் சோடா வாங்கியுள்ளார். அப்போது பாட்டிலின் உள்ளே மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஊசி கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

 

ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் அன்னலட்சுமி புகார் அளித்துள்ளார். அதில் பன்னீர் சோடா தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற போலி தயாரிப்புகளை தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ மூலம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெட்டிக் கடையை ஆய்வு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon