ஆண் மருத்துவரும் பெண் நர்ஸும் மோதல்..! காரணம் என்ன..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஆண் மருத்துவரும் பெண் நர்ஸும் அடித்து சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன. டாக்டர் நர்ஸ் மோதல் குறித்து தகவல் வெளியானதும் மாவட்ட ஆட்சியர் அது குறித்த விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் இரண்டு பேருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது. வாய் பேச்சு அடிதடி ஆக மாறிவிட்டது என ஆட்சியர் தெரிவித்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.






