தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் ..!
கொரொனா பரவல் அதிகமாக காணப்படும் சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் சார்பாக அவரது வழக்கறிஞர் நீதிபதி சிவஞானம் ஆனந்தி அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தனர்.
தமிழகத்தில் நோய்த்தொற்று இரண்டாவது மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டு கூட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்று கூறினார்.
மதுக் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர்.






