மருத்துவரின் அறிவுரை இன்றி தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்து எடுக்க கூடாது..!
கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரை இன்றி தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்து வாங்கி போட்டு கொள்ள கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.
பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்தவர்கள் பதற்றம் அடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் 40 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவித்தார். தொற்றுக்கு ஆளான நபர்கள் தாங்களாகவே ரெம்டெசிவர் வாங்கிப் போட்டுக் கொள்வது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.






