கார் விபத்தில் சிக்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்..!
கார் விபத்தில் சிக்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்வதற்காக சிவகங்கையில் இருந்து காரில் சென்றிருக்கிறார் ஆட்சியர் மதுசூதன ரெட்டி.
கண்மாய் என்கிற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளா.ர் சிறுவன் மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்துள்ளார். அதன் முன் பக்க டயர் வெடித்து அருகே இருந்த மின் கம்பத்தில் மோதியதில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காற்றுப்பை வெளியாகி ஆட்சியரின் உயிரை காப்பாற்றியுள்ளது. உடன் பயணித்த ராஜசேகரன் மற்றும் கார் ஓட்டுனர் ஷியாம் ஆகியோர் சிறு காயங்களுடன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.






