--- --:--:-- --

மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தடை பட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு..!

2

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கொரொனா பாதிப்பு காரணமாக நோயாளிகள் 22 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்டர் சாகிர் உசேன் மருத்துவமனையில் உள்ள டேங்கில் ஆக்ஸிஜன் நிரப்பும் போது வாயு கசிவு ஏற்பட்டது.

 

அதனால் சுமார் 30 நிமிடங்கள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் தடை பட்டதாக தெரிகிறது. மருத்துவமனையில் 171 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்த 22 பேர் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்ததாக நகராட்சி ஆணையர் கைலாஷ் தெரிவித்துள்ளார்.

 

பின்னர் வாயு கசிவு தனியார் நிறுவனத்தால் சரி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேசிய மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

இந்த நிலையில் வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon