14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த டிக் டாக் பிரபலம்..!
விசாகப்பட்டினத்தை சேர்ந்த பார்கவ் என்ற பிரபலம் 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்தவன் பார்கவ்.
பிரபலமான நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் ஃபன்பக்கெட் பார்கவ் என்று பலராலும் அறியப்பட்ட வந்தார். தற்போது தான் செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டிக்டாக் தடை செய்யப்பட்டாலும் யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த சிறுமியிடம் தனது காதலை கூறியுள்ளார்.
அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார். இதனிடையே சிறுமியிடம் புகைப்படங்களும் வீடியோவும் என்னிடம் உள்ளன. நான் சொல்வதை ஏற்க மறுத்தால் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பயந்துபோன அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






