மம்தா பானர்ஜியின் ஆடியோவை வெளியிட்ட பாஜக..!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சடலங்களை ஊர்வலமாக கொண்டு சென்று அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்ததாக மம்தா பானர்ஜியின் ஆடியோ உரையாடலை பாஜக வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தலின்போது அந்த நகரில் நடந்த வன்முறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 18 வயது இளைஞன் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை வைத்து மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரை அழைத்து சடலங்களுடன் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தும் படி மம்தா கூறியது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.






